ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும், தற்போதைய அரசாங்கத்தின் நிழல் ஜனாதிபதி என்று வர்ணிக்கப்படுபவருமான பஸில் ராஜபக்ச, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீரவுக்கும் இடையே திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கொழும்பு – ஷங்கரில்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு கடந்த வார இறுதியில் இடம்பெற்றிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த இருவரும் குறித்த விடுதியில் நடந்த இருவேறு நிகழ்வுகளுக்கு சென்ற போது மின்தூக்கியில் ஒன்றாகவே பயணித்திருக்கின்றனர்.
சந்திப்பின்போது பேசப்பட்ட வியங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இருப்பினும், ஒருபக்கம் இருவரும் உறவினர்கள் என்றுதான் தெரிவிக்கப்படுகின்றது.
பஸில் ராஜபக்சவின் மனைவியான புஷ்பா மங்கள சமரவீரவின் நெருங்கிய உறவினர் என்பதோடு அவரும் மாத்தறையைச் சேர்ந்தவர்தான்.
இந்த நிலையில், பஸில் ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டாபய சார்ந்த இரட்டைக் குடியுரிமை விவகாரம் பேசப்பட்ட சந்தர்ப்பத்தில் இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை சர்ச்சையாக கொள்ளத் தேவையில்லை என்றே மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
அதேபோல நாடாளுமன்றத்தில் இருந்த காலத்திலும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, பஸில் ராஜபக்ச நிச்சயம் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டிய ஒருநபர் என்பதை வலியுறுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.