மட்டக்களப்பு மாவட்டத்தில் க.பொ.த.சாதாரண பரீட்சாத்திகள் சகலரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டும் பரீட்சை வேண்டிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது அரசாங்க அதிபர் க.கருணகாரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தேவையான ஏற்பாடுகள் அனைந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ள தாகவும் மாணவர்கள் தற்போதுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இடம் பெறயுள்ளதால்
பரீட்சாத்திகள் சகலரும் பரிட்சை நிலையத்திற்கு நேரகாலத்திற்கு வருகை தந்து சுகாதார நடைமுறை களை பின்பற்றி முககவசம் அணிந்து சமுக இடை வெளிகளை பின்பற்ற வேண்டுமென அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
அத்துடன், அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் அனைந்து ஏற்பாடுகளும் பரீட்சை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தேவையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை க.பொ.தா.சாதாரண பரீட்சைக்கு 159 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் இம்முறை 22928 மாணவர்கள் பரிட்சைக்குத் தோற்றுகின்றனர்.
எனவே மாணவர்கள் மேலதிக கிடைத்த விடுமுறைகளை நன்கு பயன் படுத்தி உயர் தரத்திற்கு வேண்டிய சிறந்த பெறுபேறுகளை பெற தாம் வாழ்த்துகளை அரசாங்க அதிபர்
ஏன்ற வகையில் தெரிவிப்பதாக மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணகாரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.