எஸ்.வியாழேந்திரன்

அரசாங்கம் மக்களை கடனாளியாக்கியது -எஸ்.வியாழேந்திரன்

by Deva
173 views

ஜனாதிபதி அரசாங்கம் இப்பொழுது வீடமைப்பு சம்பந்தமாக மக்களை கடனாளியாக்காமல் அவர்களுக்குரிய சொந்த வாழ்விடத்தில் வீடை கட்டிக் கொடுக்க

வேண்டும் எனும் விடையத்தில் நாட்டினுடைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ அவர்களும் மிகவும் கவனமாக இருக்கின்றார்கள், அதே போன்று வீடமைப்புத் துறைக்கு பொறுப்பாக இருக்கின்ற

இராஜாங்க அமைச்சர் இந்திக்க அவர்களிடமும் நாங்கள் பல தடவைகளாக பேசிக்கொண்டு இருக்கின்றோம், பல வீட்டுத் திட்டங்களை நாங்கள் கோரியிருக்கின்றோம்.

நாங்கள் முன்வைக்கும் எந்தக் கோரிக்கைக்கும் எந்த விதமான மறுப்பும் தெரிவிக்காமல் உண்மையில் வட கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு பெருமளவான வீட்டுத் திட்டங்களிற்கான தேவைப்பாடு இருக்கின்றது.

இப்பொழுது அரசாங்கம் அவற்றிற்கான தீர்வை மிகவும் வேகமாக முன்னெடுத்து வருகின்றது.

கடந்த அரசாங்க காலத்தில் 12,8000 ஆயிரம் பெறுமதியான, சுமார் 65 ஆயிரம் வீடுகள் வரவிருந்தது அதில் 6 வீடுகளைக் கூட கடந்த அரசாங்கம் கட்டி முடிக்கவில்லை.

ஆனால் அந்த வீட்டுத்திட்டத்திலே நாங்கள் மட்டக்களப்பில் 100 வீடுகளை கட்டுவதற்கான முன்னெடுத்து வருகின்றோம்.

கடந்த ஆட்சி காலத்திலே மக்களுக்கு கிடைக்காமல் தடைப்பட்டிருந்த வீட்டுத் திட்டத்திற்கான வேலைத்திட்டத்தினையும் நாங்கள் இப்போது மிக வேகமாக முன்னெடுத்து வருகின்றோம்.

கடந்த ஆட்சியில் எல்லோரிடமும் இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தினை அவர்களிடம் வாங்கி அவர்களுக்கான வீட்டுத்திட்டத்தினை வழங்கினார்கள், மொத்தத்தில் கடந்த அரசாங்க காலத்தில் மக்களை கடனாளியாக்கினார்கள்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த கடனையும் செலுத்துவதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.

ஆகவே கடந்த அரசாங்க காலத்தில் மக்கள் கடனாளியாக்கப்பட்டுள்ளார்கள், ஆனால் தற்போதைய அரசாங்கம் மக்களை கடனில் இருந்து மீட்டுக் கொள்ளும் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றதென இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கூறியிருந்தார்.

Please follow and like us:

Related Posts