காணிகளை அபகரிக்க அரசு திட்டம் தடுத்து நிறுத போராடும் கஜேந்திரகுமார்

காணிகளை அபகரிக்க அரசு திட்டம் தடுத்து நிறுத்த போராடும் கஜேந்திரகுமார்

by Deva
200 views

காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவானது அதன் வடமாகாணத்திலுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்களுக்குமான காணி ஆவணங்களையும் அதன் அவுலவலகத்தையும் வடமத்திய மாகாணத்தில் (அனுரதபுரம்) அமைந்துள்ள காணி சீர்திருத்தத.

ஆணைக்குழு டு.சு.ஊ. அலுவலகத்துக்கு மாற்’றும் நோக்கில் ஆவணங்களைப் பொறுப்பேற்வதற்காக அனுரதபுரத்திலிருந்து அதிகாரிகள் வருகைதந்திருந்தனர். அம் முயற்சியினைத் தடுத்து நிறுத்தும் வகையில்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இணைந்து யாழ்ப்பாணம் கச்சேரி வாயிலை வழிமறித்து எதிர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் கடந்த 02-02-2021 திகதி யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வடமாகாணத்துக்கான காணி ஆவணங்கள் உள்ள அலுவலகம் நீண்ட காலமாக யாழ்ப்பாண மாவட்டச்செயலகத்தில்தான் இயங்கிவருகின்றது

அந்த அலுவலகத்தையோ காணி ஆவணங்களையோ அனுரதபுரத்திறகு மாற்றக்கூடாதென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்து.

அதனை அடுத்து இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மேற்படி வியடத்தை சுட்டிக்காட்டி சிங்கள மயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே இவ் அலுவலகமும்’ ஆவணங்களும் அனுரதபுரத்திற்கு மாற்றப்படுகின்றது.

எனவே அந்த நடவடிக்கை நிறுத்தப்படல் வேண்டும் எனக் கோரியிருந்தார். எனினும் அவற்றையெல்லாம் புறக்கணித்து ஆவணங்களைப் பொறுப்பேற்பதற்கும், அலுவலகத்தை மாற்றுவதறகுமாக தென்னிலங்கை அதிகாரிகள் இங்கு இன்று வந்திருந்த நிலையில்

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் மூலம் இன்று ஆவணங்கள் அனுரதபுரத்திற்கு கையளிக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்துக்குரிய காணி ஆவணஙக்களை வடமத்திய மாகாணத்துக்குமாற்றி அங்கிருந்து வடக்குமாகாண காணிகளை கபளீகரம் செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.

Please follow and like us:

Related Posts