கருவின் அழைப்பை நிராகரித்த சஜித்-ரணில்

by Mano
184 views

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் என ஒருவரை களமிறக்கப் போவதில்லை என்று முன்னாள் சபாநாயகரான கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று கொழும்பு ஜானகி விடுதியில், அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமாக பயணத்தை தடுக்கும் தொனிப்பொருளில் தேசிய சந்திப்பொன்று நடந்தது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இருந்த போதிலும் அவர்கள் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பதால் கரு ஜயசூரிய கடும் அதிருப்தி வெளியிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Please follow and like us:

Related Posts