மட்டுமாவட்டத்தில் கறுப்பு ஞாயிறு விசேட வழிபாடுகள்.

மட்டுமாவட்டத்தில் கறுப்பு ஞாயிறு விசேட வழிபாடு.(Video)

by Deva
187 views

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் குண்டு தாக்குதல் நடத்தியவர்களையும் அதற்கு உதவியவர்களுக்கும் தண்டிக்க படவேண்டுமென வலியுறுத்தி மட்டுமாவட்டத்தில் சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இன்று காலை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கறுப்பு ஞாயிறு விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

கொழும்பு மறை மாவட்ட ஆயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வேண்டு கோளின் பேரில் மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் ஆலய பங்குதந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி  சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கிறிஸ்தவர்கள் தற்போது தவக்கால விரத காலத்தை அனுஸ்டித்து வருவதால் இன்று சகல கிறிஸ்தவ் தேவாலயங்களிலும் 3வது ஞாயிறு வழிபாடுகள் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

இதில் தவக்காலத்தில் கிறிஸ்தவ மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய புனித கடமைகள் பற்றியும் தவிர்க்கப்படவேண்டிய வழிமுறைகள் பற்றியம் ஆலய பங்குதந்தை யினால் கலந்தகொண்ட அடியார்களுக்கு மறையுரைகள் இடம்பெற்றன.

பொதுமக்களின் பாதுகாப்கை கருத்திற்கொண்டு சகலரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியதுடன் சமூக இடைவெளிகளை பெணி முககவசம் அணிந்து வரவு பதியப்பட்டு  இந்த தவக்கால வழிபாடகள் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றன.   

Please follow and like us:

Related Posts