ஞானசார மீது கைவைக்க மாட்டோம் அரசாங்கம் அறிவிப்பு.

by Mano
187 views

இனவாத அமைப்பு என பொதுபல சேனாவை தடை செய்யக்கோரி ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

பொதுபல சேனாவை தடை செய்வதால் எந்த நன்மையும் ஏற்பட்டுவிடாது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட இறுதி அறிக்கையில், பொதுபல சேனாவை தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இனங்களுக்கு இடையே பிரிவை அந்த அமைப்பு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தே இந்த பரிந்துரையை ஆணைக்குழு முன்வைத்துள்ளது.

எனினும் ஆணைக்குழுவின் இப்பரிந்துரைக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் பகிரங்கமாகவே கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பொதுபல சேனாவை தடை செய்வதற்கு அரசாங்கத்திற்கு கடுகளவேனும் விருப்பமில்லை என்று கூறினார்.

“ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஆணைக்குழு அறிக்கையில் உள்ள சில பரிந்துரைகளை அமுல்படுத்துவது சிரமமாகும். விசேடமாக பொதுபல சேனா அமைப்பு குறித்த பரிந்துரையை அமுல்படுத்துவதானது கடினமாகும். அரசாங்கத்தின் விருப்பமும் அதுகுறித்து இல்லை.

அந்த அமைப்பை தடை செய்வதால் நன்மை ஏற்படும் என்றல்ல. ஆகவே அரசாங்கம் அவ்வமைப்பை தடை செய்யாது.

ஆனால் கல்வி குறித்த பரிந்துரைகளை அமுல்படுத்த முடியும். இனவாத சிந்தனைகள் பாட விதானங்களில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை நீக்க வேண்டும்.

மத்ரஸா நிலையங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை கல்வி அமைச்சு அனுமதிக்கின்றது“ என அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

Related Posts