விமலை நீக்க- மஹிந்தவிடம் 43 MPகள் பிடிவாதம்

by Mano
220 views

அரசாங்கத்திலுள்ள பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 43 பேர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைச்சர் விமல் வீரவன்ச மீது கடும் குற்றச்சாட்டுக்களை அவர்கள் இதன்போது பிரதமரிடம் முன்வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவையில் இருந்து கொண்டு அரசாங்கத்தை குழப்பும் சதிமுயற்சியில் விமல் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்டுவரும் விமர்சனங்கள் காரணமாக அரசாங்கம் பல்வேறு அசௌகரியத்திற்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ள பின்வரிசை உறுப்பினர்கள், அதுகுறித்த காணொளிகளையும் பிரதமரிடம் காண்பித்திருப்பதாக அறியமுடிகின்றது.

இதனை அவதானித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடும் சங்கடத்திற்கு ஆளாகியதாக அலரிமாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.

2015ஆம் ஆண்டிற்கு முன்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள் இன்று அரங்கேறிவருவதாகவும், இறந்த காலத்தில் ஏற்பட்ட நிலைமை மீண்டும் அரசாங்கத்திற்கு ஏற்படலாம் என்கிற எச்சரிக்கையையும் பிரதமரின் சந்திப்பின்போது பின்வரிசை எம்.பிக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைக் கவனத்திற்கொண்டு அமைச்சர் விமல் வீரவன்ச தொடர்பில் விரைவில் கடும் தீர்மானமொன்றை எடுக்கும்படியான கோரிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வலுவாக விடுத்திருக்கின்றனர்.

எனினும் பிரதமர் மஹிந்த இந்த விடயங்களை ஏற்றுக்கொண்ட போதிலும் பின்வரிசை உறுப்பினர்களுக்கு நேரடியாக எந்த பதிலையும் அளிக்கவில்லை என்றே அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Please follow and like us:

Related Posts