கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர சிவராத்திரி.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர சிவராத்திரி.

by Deva
345 views

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர ஆலய சிவராத்திரி விசேட வழிபாடுகள் இந்துக்கள் அனுட்டிக்கும் விரதங்களுள் சிவனுக்கேயுரிய மிகவும் விசேடமாக விரதமாக சிவராத்திரி கருதப்படுகிறது.

பிரம்மா விஸ்ணு ஆகிய இருவரும் தம்முள் பெரியவர் யார் என்ற அகங்காரப் போட்டியில் அவர்களின் இருவரினதும் ஆணவத்தை அடக்க இறைவன் சோதி வடிவில் தோன்றிய நாளாகவே சிவராத்திரி கருதப்படுகிறது.

இந்நாளில் இலிங்கோற்பவ நேரத்தில் விழித்திருந்து சிவனை நோக்கி வில்வம் இலை போன்ற அர்ச்சனை பொருட்களால் பூஜை வழிபாடகளில் ஈடுபட்டால் மிகுந்த அருள் கிட்டும் என்பது ஜதீகம்.
கடந்த வருடம் கொரோனா காரணமாக சிவராத்திரி விரதம் அனுட்டிக்கப்பட முடியாத நிலையில் இவ் வருடம் இந்து சமய கலாசார அலுவல்கள அமைச்ச மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் இவ் வருடம் விரதத்தை சுகாதார முறைப்படி அனுட்டிக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையின் பஞ்சஈச்சரங்களில் ஒன்றான கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயத்திலும் சிவராத்திரி கான விசேட வழிபாடுகள் சுகாதார முறைப்படி நடைபெற்றது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சோதிலிங்க குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. சிவனுக்கு அபிசேகம் இடம்பெற்று 4 சாம பூசைகள் இடம்பெற்று வழிபாடுகள் இடம்பெறும். பக்த அடியார்கள் சுகாதார முறைப்படி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Please follow and like us:

Related Posts