அடுத்த பிரதமராவதற்கான முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார் என்கிற பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கின்றது.
இதற்காக அவர் தற்போதைய அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியைக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தம்வசப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு அதிருப்தியிலுள்ள சுமார் 40 உறுப்பினர்கள் தற்போது மைத்திரியுடன் பேச்சு நடத்தியிருப்பதாகவே சுதந்திரக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இந்த அரசாங்கம் மீதான எதிர்ப்பலைகள் தற்போது அதிகரித்து வருகின்றன. இதே நிலைமை தொடர்ந்து சென்றால் வருகின்ற
2023ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்குப் பின் அரசாங்கம் நெருக்கடியை சந்தித்து மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் இழக்கலாம் என்கிற அச்சம் காணப்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தவுள்ள மைத்திரி, நாடாளுமன்றத்தில் தனக்கான மூன்றிலிரண்டு பெரும்பான்மையை அமைத்து பிரதமராவதற்கான
முயற்சி அல்லது அல்லது 2024இல் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் பிரதமராவதற்காக தனது அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொள்வற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவே கூறப்படுகின்றது.