மாமாங்கேஸ்வர சிவராத்திரி வழிபாடுகள்.

மாமாங்கேஸ்வர சிவராத்திரி(video)

by Deva
292 views

கடந்த வருடம்  சிவராத்திரி விரதம் அனுட்டிக்கப்பட முடியாத நிலையில் இவ் வருடம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் இவ் வருடம் விரதத்தை சுகாதார முறைப்படி அனுட்டிக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையின் பிரசித்தி பெற்ற அமிர்தகழி மட்டு மாமாங்கேஸ்வர ஆலயத்திலும் சிவராத்திரி  பூஜை  வழிபாடுகள் சுகாதார முறைப்படி நடைபெற்றது. 

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஆதி சௌந்தரதராஜக் குருக்கள் தலைமையில் இடம் பெற்றது.  அபிசேகம் இடம்பெற்று 4 சாம பூசைகள் இடம்பெற்று வழிபாடுகள் சுகாதார முறைப்படி இடம்பெற்றதோடு பெருமளவான அடியார்களும் கலந்துகொண்டனர்.

 இந்துக்கள் அனுட்டிக்கும் விரதங்களுள் சிவனுக்கேயுரிய மிகவும் விசேடமாக விரதமாக சிவராத்திரி கருதப்படுகிறது.

இந்நாளில் இலிங்கோற்பவ நேரத்தில் விழித்திருந்து சிவனை நோக்கி வில்வம் இலை போன்ற அர்ச்சனை பொருட்களால் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டால் மிகுந்த அருள் கிட்டும் என்பது ஜதீகம்.

மட்டக்களப்பு மாவட்ட ஆலயங்களிலும் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் சுகாதார முறைப்படி நடைபெற்றன.  

Please follow and like us:

Related Posts