மத்ரஜா- புர்கா தடை:அடுத்த வாரத்தில் அமைச்சரவை பத்திரம்!

by Mano
292 views

இலங்கையில் மத்ரஸா பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் பெண்களின் புர்கா ஆடைகள் மீதான தடை தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இயங்கிவருகின்ற மத்ரஸா பாடசாலைகளை தேசிய பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு தடை செய்யவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் சிறப்பு உரையொன்றை நிகழ்த்தி தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் மீண்டும் இதனைக் குறிப்பிட்டிருப்பதோடு அமைச்சரவைப் பத்திரத்தை தயார் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

நாட்டின்s பல பாகங்களிலும் சுமார் 1669 மத்ரஸா பாடசாலைகள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவை தவிர, அராபி பாடசாலைகள் என 317 பாடசாலைகளை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த அனைத்துப் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளையும் தடை செய்து அவற்றை அரச பாடசாலைகள் அல்லது பல்கலைக்கழகங்களுக்குக் கீழே கொண்டுவரவும் அரசாங்கம் ஆலோசனை செய்து வருவதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையிலும் மத்ரஸா பாடசாலைகள் குறித்த எச்சரிக்கையை ஆணைக்குழு வழங்கியிருந்ததோடு பொதுபல சேனா உள்ளிட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த கடும்போக்குவாத பௌத்த அமைப்புக்களும் இந்தப் பாடசாலைகளைத் தடைசெய்யும்படியே அண்மைக்காலமாக வலியுறுத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

Related Posts