மாகாண சபை தேர்தல் குறித்து ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

by Mano
328 views

மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள வரைபு மற்றும் அதில் உள்ள வியாகுலத்தன்மை என்பவற்றை நீக்கி விரைந்து தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சம்பந்தப்பட்ட தரப்புக்கு பணித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாகாண சபை உறுப்பினர்களின் முக்கியஸ்தர்களை நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி சந்தித்தார்.

இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்திருக்கின்றார்.

மேலும் தொகுதிவாரி முறை, எல்லை நிர்ணயம், 50ற்கு 50, பெண்களின் வீதம் உட்பட கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் கொண்டுவரப்பட்ட யோசனைகள் அதே அரசாங்கத்தில் இருந்தவர்களே தோற்கடித்திருந்தனர். மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபையை செயற்படுத்துவது கடினம் என்பதை ஜனாதிபதி இதன்போது கூறியிருக்கின்றார்.

Please follow and like us:

Related Posts