உணவு தவிர்ப்பில் பங்கேற்ற கூட்டமைப்பினர் (PHOTOS)

by Mano
275 views

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய உணவு தவிர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 14வது நாளாக இன்றும் தொடர்கின்றது.

நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இன்றையதிம் போராட்டத்திற்கு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியார் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.

குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பரும் தனது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

Please follow and like us:

Related Posts