ரயில் வேலைநிறுத்தம் முடிவுக்கு

by Mano
174 views

அவசரமாக ஆரம்பிக்கப்பட்ட ரயில் வேலை நிறுத்தம் தற்சமயம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சில் அமைச்சர் காமினி லொக்குகேவுக்கும், ரயில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று முற்பகலில் விசேட சந்திப்பொன்று நடந்தது.

ரயில் சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு வேறொரு ரயில் பயணத்தில் ஈடுபடுகின்ற போது தண்டம் விதிக்கப்படுகின்றமை, ரயில் திணைக்கள ஊழியர்களின் ஒழுக்காற்று விசாரணைகளை விரைவில் முடிவுறுத்தாமை,  வெற்றிடயங்களாக உள்ள ரயில் கட்டுப்பாட்டாளர்கள் பதவிக்கு பொருத்தமானவர்களை நியமிக்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த வேலைநிறுத்தம் நேற்றுமுதல் ஆரம்பமாகியது.

இந்த நிலையில் அமைச்சர் வழங்கிய உறுதிமொழிகளுக்கு மத்தியில் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

Please follow and like us:

Related Posts