ஸ்ரீதரன் எம்.பியிடம் துருவித்துருவி விசாரணை!

by Mano
211 views

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனிடம் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இன்று காலை கிளிநொச்சியில் அமைந்தள்ள அவரது அலுவலகத்தில் வைத்து பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் மன்னார் பொலிசாரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த கடந்த மாதம் 3 ஆம் தேதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான பேரணி பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பொலிகண்டியில் நிறைவு பெற்றுள்ளது.

 மன்னார் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட  பிரதேசத்தில் இடம் பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பிரிடம்  மன்னர் போலீசாரால்  வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரிடமும் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

Related Posts