அமைச்சர் விமல் பதவிநீக்கம்?

by Mano
347 views

அமைச்சர் விமல் வீரவன்சவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கான அழுத்தங்கள் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டு வருவதில் அதிகரிப்பு நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கறுவா தயாரிப்பில் உள்ள சிகரட் ஒன்றினை கொள்வனவு செய்யும்படி அமைச்சர் விமல் தூண்டியுள்ளார்.

அதற்காக அவர் தனது வாயில் சிரகட் ஒன்றை பிடித்தவாறும் காட்சியளித்திருந்தார்.

உடலுக்கு பாதிப்பை இந்த சிகரட் ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் விமல் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் விமலின் இந்த செயற்பாட்டினால் சமூகத்திற்கு பாரிய பிழையான முன்னுதாரணம் ஏற்பட்டிருப்பதால் அவரை  பதவியிலிருந்து நீக்கும்படி மகாநாயக்க தேரர்கள் சிலர் அரச உயர்தரப்பிடம் வலியுறுத்தியிருப்பதாக தெரியவருகின்றது.

Please follow and like us:

Related Posts