இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம், மனித உரிமைமீறல்களுக்கு பொறுப்பு கூறவேண்டிய இலங்கை அரசு அதற்கு மாற்றாக காலத்தை கடத்தி வருகின்றது.
இலங்கைக்கு எதிராக ஐநாவில் வருகின்ற திங்கள்கிழமை வாக்கெடுப்புக்கு வருகின்றது. இலங்கைக்கு எதிராக கனடா, பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், உள்ளிட்ட 20 துக்கும் அதிகமான நாடுகள் இந்த பிரேனைக்கு ஆதரவாகவும்
எதிராக இந்தியா, ரஷ்யா, பாக்கிஸ்தான், சீனா,என ஒன்பது நாடுகள் பிரேனைக்கு எதிராக வாக்களிக்க உள்ளது.
அண்மையில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ இந்தியா பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் ஐநா தொடர்பாக கலந்துரையாடினர்
இலங்கைக்கு இந்தியா ஆதரவு தரவேண்டும் என்று கேட்டிருந்தார் இதற்க்கு இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு தான் என்று கூறியுள்ளார் பாரத பிரதமர் திரு. மோடி அவர்கள்.
இதற்க்கு இன்று தனது ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மேலும் கூறியதாவது.
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நடைபெற்ற கொடுமைகள், மனிதஉரிமை மீறல்கள் எல்லாவற்றுக்கும் இலங்கை அரசு பொறுப்பு ஏற்கவேண்டும்
இதற்கான தீர்மானம் ஐநாவில் வாக்கெடுப்புக்கு வரஉள்ளது இந்தியா தனது நிலைப்பாட்டில் மாற்றம்கொண்டுவந்து தமிழர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறிள்ளார்.