ஆட்டநிர்ணயம் – சொத்து விபரங்களை ஒப்படைத்த இலங்கை வீரர்

by Mano
341 views

ஆட்டநிர்ணயச் சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சித்திர சேனாநாயக்க, தனது சொத்து விபரங்களை சமர்பித்திருக்கின்றார்.

விளையாட்டில் இடம்பெறும் மோசடிகள் பற்றிய விசாரணைப் பிரிவில் அண்மையில் அவர் ஆஜராகியிருந்ததோடு, கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் போட்டியில் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டமை குறித்த விசாரணைக்கு முன்னிலையாகி வாக்குமூலமும் அளித்திருந்தார்.

விசாரணைப் பிரிவு, அவரது சொத்து விபரங்களைக் கோரியிருந்தது.

இந்த நிலையில்தான் அவர் விபரங்களை சமர்பித்திருக்கின்றார். இதுகுறித்து இருநாட்கள் விசாரணை செய்ய குறித்த விசாரணைப் பிரிவு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Please follow and like us:

Related Posts