நாடாளுமன்றத்தை சூழ்ந்துள்ள தியவன்னா ஓயாவின் நீர் நிறம் மாறியிருப்பது குறித்து எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்டார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்றத்திற்கு முன்பாக உள்ள நீர்த்தாங்கி சுத்திகரிக்கப்பட்டு அதன் நீர் குளத்திற்கு விடப்பட்டதால்தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என்று சபைக்குத் தெரிவித்தார்.
தியவன்னா ஓயாவின் நீர் மாசுபட்டமையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், இதுகுறித்து கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
எனினும் சபாநாயகரின் இந்த பதிலை ஏற்றுக்கொள்ளாத சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்றத்தைச் சூழ்ந்துள்ள தியவன்னா ஓயாவின் நிலைமையே இப்படியிருந்தால், சிங்கராஜ, நக்கல்ஸ், ஹோட்டன்தென்ன உள்ளிட்ட காடுகளின் நிலைமை என்ன என்பதையும் சபையில் கேள்வி எழுப்பினார்.
Please follow and like us: