அமைச்சர்களுக்கு ஒருவாரம் கெடுகொடுத்த கோட்டாபய!

by Mano
188 views

மாகாண சபைகள் தேர்தலை விரைவுப்படுத்துவதற்கான யோசனை நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைச் சந்திப்பு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடந்தது.

அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனினால் மேற்படி யோசனை அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனை குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என அமைச்சர்கள் சிலர் இதன்போது தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய ஒருவாரத்திற்கு இந்த யோசனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு, பெரும்பாலும் அடுத்தவாரம் நடைபெறும் அமைச்சரவையில் குறித்த யோசனை பற்றி பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Please follow and like us:

Related Posts