இஸ்ரேல்லில் கடந்த மூன்று தேர்தலிலும் எந்தகட்சிக்கும் பெருன்பான்மை கிடைக்காத நிலையில் 4வது முறையாக நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மீண்டும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
கொரோன காரணமாக மக்கள் வாக்கு செலுத்துவதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள் என திர்பார்க்கப்பட்டது அனாலும் 87.5 வீத வாக்குகள் மொத்த வாக்காளர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர்.
மும்முனை போட்டியாக இந்த தேர்தல் நடைபெற்றது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அந்த வகையில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாவின் லிக்குட் கட்சி கூட்டணி 59 இடங்களில் வெற்றி பெற்றது.
அதேபோல் எதிர் கூட்டணி 56 இடங்களில் வெற்றியை பெற்றது. ராம் என்று அழைக்கப்படும் சிறிய அரபு கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இப்பொது யார் நாட்டை ஆளவேண்டும் என்பதனை முடிவுசெய்யும் சக்தியாக ஒரு சிறிய கட்சி தீர்மானிக்க உள்ளது.