தனது-மனைவியை-கூரிய-ஆயுதமொன்றினால்-தாக்கி

மனைவியைக் கொலை செய்து எரித்து தானும் அதே தீயில் பாய்ந்த கணவன்.

by Deva
347 views

தனது மனைவியை கூரிய ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்து உடலுக்கு தீ மூட்டிய கணவன், அதே தீயில் தானும் குதித்து உயிர்நீத்த சம்பவம் ஒன்று கண்டி – கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கம்பளை-அங்குருமல்ல பகுதியில் காலை 9.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேற்படி தம்பதியினர் ஒரே காணியில் வெவ்வேறாக வீடு கட்டி வசித்து வந்துள்ள நிலையில், இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இவ்வாறு கணவன் தனது மனைவியை கொலை செய்துள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் 57 வயதானவர் எனவும் உயிரிழந்த ஆண் 68 வயதானவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் இருவராலும் விவாகரத்து தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Please follow and like us:

Related Posts