கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான காணி.

by Deva
173 views

கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான காணி உரிமைகளை பெற்றக்கொடுத்து

அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதே ஜனாதிபதியின் நோக்கமாகும் – காணி சிர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் கீர்த்தி கமகெ

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்திற்கமைவாக அரசாங்கத்தினால்  சகல மக்களுக்கும் இக மத பேதமின்றி அவர்களுக்கான காணி தீர்வினை பெற்றுக்கொடுப்பதே

எமது இலக்காகும். அதற்கு அரச அதிகாரிகள் திறம்பட செயற்பட வேண்டும் என இன்று (25)  மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய மகாநாட்டு மண்டபத்தில் காணி சிர்திருத்த ஆணைக்குழுவின்.

ஏற்பாட்டில் இடம்பெற்ற எமது காணி எமது உயிராகும் எனும் கருத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் காணி விடயங்களை கையாளும் அரச உத்தியோகஸ்தர்கள்.

முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பான தெளிவுபடுத்தும் செயலமர்வு  மட்டு மாவட்ட மேலதிக செயலாளர் காணிப்பிரிவு திருமதி. என். முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்

பிரதம அதிதியாக கலந்துகொண்ட காணி சிர்திருத்த ஆணைக்குழு  பணிப்பாளர் நாயகம் கீர்த்தி கமகெ இவ்வாறு கருத்துதெரிவித்தார். 

இங்கு கிழக்கு மாகாண  காணி சிர்திருத்த ஆணைக்குழுவின் பணி;பாளர் எஸ் ரவிராஜனின் வேண்டுகோளின் பேரில் மக்கள் காணி ஆணைக்குழு அறிக்கை முதன்முதலில் கிழக்கு மாகாணத்தில் பணிபுரிவோருக்கு  அரச காணி முகாமைத்தவ

தமிழ் கைநூல் வழங்கிவைக்கப்பட்டது. மற்றும் காணி விடயங்களை கையாளும் போது அரச உத்தியோகஸ்தர்கள் பொது மக்களை மகிழ்ச்சிகரமான செயற்பாட்டுதீர்வுகளை பெற்றுக்கொடுப்பதேர்டு சுற்றாடலுக்க

பாதிப்பு ஏற்படா வகையில் தீர்மானம் எடுத்தல் அரச அதிகாரிகள் நேர்மையாக அரசியல் அழுத்த மின்றி செயற்படல் தொடர்பாகவும் அரசாங்கத்தின் திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்து

மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தம் திர்மானங்களை எடுக்க வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.

இதில் கிழக்கு மாகாண பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி விடயங்களை கையாளும் அதிகாரிகள் காணி சிர்திருத்த ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.  

Please follow and like us:

Related Posts