மியன்மாரில் அதிகரிக்கும் படுகொலைகள் போராட்டக்காரர்கள் மீது ராணும்வம் துப்பாக்கி சூடுநடாத்தியுள்ளது. இதில் 114 போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர்.
மியன்மாரில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசை சிறைப்பிடித்து ராணுவ ஆட்சி நடத்தும் ராணுவ அதிகாரி நேற்று முன்தினம் மக்களுக்கு நிகழ்த்திய உரையில் ராணுவம் மக்களை பாதுகாக்கும் என கூறினார்.
அவர் கூறிய சில மணித்தியாலத்தில் 144 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட சம்பவம் மக்களை கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மியன்மாரின் பெரிய நகரமான யங்கோவின் இன்சீன் மாவட்டத்தில் 21வயது இளைஞன் ஒருவன் உட்பட 2 பெறும் அதே போல் மண்டேலாவில் 13 பேரும் இதில் 5இளைஞர்களும் உட்பட படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 114 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பேரணி ராணுவத்தின் ஆயுதபடை தினத்தை கொண்டாடுவதை தடுத்து நிறுத்துவதற்காக நடத்தப்பட்டது என்பது குறிப்பிட தக்கது.
இதன் போதுதான் இந்த படுகொலையை ராணுவம் செய்துள்ளது. இதற்க்கு உலகநாடுகள் இன்னும் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.