பாம்பு விஷம் கடத்தும் கும்பல் கைது!

by Mani
328 views

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் வனச்சரக அதிகாரிகள் பாம்பு விஷம் கடத்தும் கும்பளை கைது செய்துள்ளனர்.

புவனேஸ்வர் மாவட்ட வன அதிகாரி இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெருவிக்கையில் , பாம்பு விஷம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து ஒரு பெண் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து ஒரு லிட்டர் கொடிய பாம்பின் விஷம் கையகப்படுத்தப்பட்டள்ளது. பாம்பு விஷம் வாங்குபவர்களை போல வனத்துறையினர் நாடகமாடி பாம்பு விஷம் கடத்தும் கும்பலை கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர் .

இந்த பாம்பு விஷத்தை 10 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக அவர்கள் விலை பேசியுள்ளனர்.

இதற்காக 5மிமீ அளவு கொண்ட மாதிரிகளை அவர்கள் சேம்பிளுக்காக வைத்திருந்ததாக இதன் போது அசோக் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஒரு லிட்டர் விஷத்தில் மதிப்பு சர்வதேச சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகம் என்றும்,

ஒரு லிட்டர் விஷத்தை சேகரிப்பதென்றால் 200 நாகங்களிலிருந்து விஷம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வன அதிகாரி அசோக் மிஸ்ரா கூறினார்.

வனவிலங்கு பாதுகாப்பு தடை சட்டத்தின் 9, 39, 44, 49 மற்றும் 51 என 5 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 6 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் அனைவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

Related Posts