நடளாவிய ரீதியில் அதிகரித்துவரும் தேங்காய் எண்ணை கலப்படம் தொடர்பான பிர்ச்சினைகளை குறைக்கும் முகமாக பாவனையில் உள்ள தேங்காய் எண்ணைகளிமன் மாதிரிகளை பெற்று கொள்ளும் செயற்திட்டம்
மத்திய பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கல் அதிகார சபையின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் இடம் பெற்றது.
மாவட்ட ரீதியாக உள்ள மொத்த மற்றும் பிரதான விற்பனை நிலையங்களில் மேற்படி மதிரிகள் சேகரிக்கப்பட்டு இன்றைய தினம் தேசிய பகுப்பாய்வு திணக்களத்திற்க்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுள்ளது.
மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளின் ஒழுங்கமைப்பில் கலப்படம் மற்றும் அங்கிகரிக்கப்படாத எண்ணைகள் தொடர்பாக ஆரயப்பட்டதுடன் சந்தேகத்துக்குறிய எண்ணைகளின் மாதிரிகளும் பெறப்பட்டுள்ளன.
மேற்படி பெறப்பட்ட மாதிரிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தேசிய பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அத்துடன் தேசிய பகுப்பாய்வு திணைக்களத்தினூடாக மாதிரிகளில் கலப்படம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் விறபனையாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

