கட்சி மறுசீரமைப்பில் தமிழரசுக்கட்சி

கட்சி மறுசீரமைப்பில் தமிழரசுக்கட்சி

by Deva
320 views

இலங்கை தமிழரசு கட்சியின் கல்முனை தொகுதி பிரதேசத்திற்கான பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பிரதானிகளுடன்

திங்கட் கிழமை(29) இரவு அம்பாறை நற்பிட்டிமுனை பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் எதிர்கால போக்குகள் கட்சியின் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது.

தமிழரசு கட்சியின் கல்முனை தொகுதி செயற்பாட்டாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது .

இதன்போது கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான முன்நகர்வுகள்,

மாவட்ட ரீதியில் கட்சி எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சமகால அரசியல் நிலைமைகள் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் கட்சி ரீதியான செயற்பாடுகள் குறித்து தலைவரினால் கருத்துக்கள் முன்வைக்ககப்பட்டதுடன் அங்கத்தவர்களின் கேள்விகளுக்கான விளக்கங்கள் கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்திற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில்,நாடாளுமன்ற உறுப்பினரும்,

தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள் ,

கல்முனை மாநகர சபை உறுப்பினர் உறுப்பினர்கள் , உள்ளிட்ட கட்சியின் பிரதானிகளும் கலந்து கொண்டனர்.

Please follow and like us:

Related Posts