பிரேசில் நாட்டில் குழந்தைகளை பலியெடுக்கும் கொரோனா !

by Mani
41 views

பிரேசிலில் குழந்தைகளுக்கிடையே கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது , இந்த செய்தி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால் பிரேசில் நாட்டில் சுகாதாரத்துறை முடங்கியநிலையில் காணப்படுகின்றது . அந்நாட்டு அதிபர் பொல்சனாரோ தொடர்ந்தும் தொற்று பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிப்பதில் தாமதம் காட்டி வருகின்றார் , அங்கு கண்டறியப்பட்டுள்ள P.1. என்ற மரபு திரிந்த கொரோனா வேகமாக மனிதர்களிடத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டில், கடந்த மார்ச் 15-ஆம் திகதி வரை, ஒரு வயதுக்குட்பட்ட 518 பச்சிளங்குழந்தைகள் உள்பட, 9 வயதுக்குள்பட்ட 852 குழந்தைகள் கொரோனா தொற்றால் மரணித்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இந்த எண்ணிக்கையை காட்டிலும், இரண்டு மடங்கு கூடுதலான குழந்தைகள் தொற்றால் மரணித்திருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பரிசோதனை வசதி குறைவாக காணப்படுவதால் , தாமதமாக குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு வருவது, சிகிச்சை வசதியின்மை, அறிகுறிகளைத் தவற விடுவது உள்ளிட்டவை காரணங்களாக கூறப்படுகிறது. . மேலும், அந்நாட்டின் சமூக, பொருளாதார அமைப்பின் காரணமாக சரியான சிகிச்சை கிடைக்காமல், கருப்பின மற்றும் ஏழைக் குழந்தைகள் அதிகளவில் இறப்பது அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது

Please follow and like us:

Related Posts