சத்திர சிகிச்சையின் பின் திரும்பிய முரளிதரன்!

by Mano
50 views

சென்னை தனியார் மருத்துவமனையொன்றில் நேற்று திடீரென அனுமதிக்கப்பட்ட இலங்கை அணி முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சிகிச்சையின் பின்னர் திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

இருதயத்திற்கு செல்லும் இரத்த நாளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீர் சத்திரசிகிச்சைக்கு அவர் நேற்று முகங்கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவின் ஐ.பி.எல் போட்டித் தொடரில் ஹைதராபாத் அணியின் சுழற்பந்து பயிற்றுவிப்பாளராக முரளிதரன் தற்போது கடமைபுரிந்து வருகின்றார்.

Please follow and like us:

Related Posts