காணாமல் போயிருந்த இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு! அதில் இருந்த 53 பேரும் உயிரிழப்பு .

by Mani
59 views

இந்தோனேசியாவின் பாலி கடற்பகுதியில் காணாமல்போயிருந்த இந்தோனேசியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்த 53 பேரும் உயிரிழந்துள்ளனர்.இந்தோனேசிய தகவல்கள் தெருவிக்கின்றன.

ஜேர்மனி நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட இந்த நீர்மூழ்கி கப்பல் 44 ஆண்டுகள் பழமையானது
இந்த நீர்மூழ்கிக் கப்பலான கே.ஆர்.ஐ.நங்கலா-402 என்ற கப்பல் பாலி தீவின் வடக்கே பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டபோது கப்பலுக்கான தொடர்பை இழந்த நிலையில் கடலில் காணாமல் போயிருந்தது.


இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணிகள் தீவிர முயற்சியில் நடந்து வந்தது .இந்தோனேசிய இராணுவத்துக்கு உதவியாக சில பன்னாட்டு கப்பல்களும் ஈடுபட்டிருந்தன.


இதனையடுத்து, குறித்த கப்பலுடையது என சில பொருட்கள் நேற்றுமுன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில,; நேற்று நீர்மூழ்கிக் கப்பல்கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த நீர்மூழ்கிக் கப்பல் மூன்று பகுதிகளாக வெடித்துச் சிதறியுள்ளதாகவும், அதிலிருந்த 53 பேரும் உயிரிழந்துள்ளனர் எனவும் அந்நாட்டு இராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


இந்த நிலையில், இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ உயிரிழந்த 53 பணியாளர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் இந்தோனேசியர்கள் அனைவரும் சோகத்தை பகிர்ந்து கொள்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

Related Posts