ஐ.பி.எல் போட்டிகளை இலங்கையில் நடத்த விருப்பம்?

by Mano
27 views

இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டித் தொடரில் ஒரு பகுதியை இலங்கையில் நடத்த இலங்கை கிரிக்கெட் சபை விருப்பம் வெளியிட்டிருக்கின்றது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான நவ்ரக் கங்குலி, ஐ.பி.எல். போட்டிகளை முழுமையாக நடத்திமுடிப்பது குறித்து அதிகாரிகளுடன் முழுவீச்சில் பேச்சு நடத்திவருவதாக தெரிவித்துள்ளார்.

ருவன்டி – ருவன்டி, உலகக் கிண்ணம் போட்டிகளுக்கு முன்னதாக இந்த ஐ.பி.எல். தடைபட்ட போட்டிகளை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

இப்போட்டித்தொடர் முழுமையாக இரத்து செய்யப்படுமானால் 2500 கோடி இந்திய ரூபா நட்டம் ஏற்படும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கின்ற வகையில் ஐ.பி.எல் போட்டிகளில் ஒருபகுதியை இலங்கையில் ந டத்த விருப்பம் தெரிவிப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமைக் குழுப் பிரதானியான பேராசிரியர் அர்ஜுன டி சில்வா இந்திய ஊடங்களுக்குத் தெரிவித்திருக்கின்றார்.

Please follow and like us:

Related Posts