இஸ்ரேல்-பாலஸ்தீன் அமைதிப் பேச்சுக்கு அமெரிக்க தூதர் விஜயம்

by Mano
30 views

நூற்றுக்கணக்கான உயிர்களை காவுகொண்டுள்ள காஸா மோதலைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திறகும் இடையில் அமைதியின்மை தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றது.

இந்த நிலையில், இருநாடுகளிடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக அமெரிக்கப் பிரதிநிதியான ஹாடி அம்ர் டெல் அவிவ் நகரை சென்றடைந்திருக்கின்றார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு உடன்படும் என்ற நம்பிக்கையில் இஸ்ரேல், பாலஸ்தீன மற்றும் ஐ.நா. அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இஸ்ரேலிய இராணுவம் காசாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதோடு பதில் தாக்குதல்களை ஹமாஸ் இயக்கம் நடத்திவருகிறது.

கடந்த ஐந்து நாட்களில் பதிவு செய்யப்பட்ட மோதல்கள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் நடந்த மிக மோசமான வன்முறைகளைக் குறிக்கின்றன.

காசா மோதலில் இதுவரை 133 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுவதோடு இஸ்ரேலில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகிய இந்த இருதரப்பு மோதல்கள் காரணமாக பதற்றம் அதிகரித்தே காணப்படுகின்றது.

Please follow and like us:

Related Posts