காஸாவில் குவியும் டிரக் வண்டிகள்

by Mano
23 views

காஸாவில் ஏற்பட்டுள்ள அமைதி நிலைமைக்கு மத்தியில் மீண்டும் சொந்த இடங்களுக்குத் திரும்பிவரும் மக்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் பல்வேறு நாடுகளாலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கு இடையே இடம்பெற்ற கடும் போரினைத் தொடர்ந்து நேற்று முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காஸாவிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்ப ஆரம்பித்தனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை அளிக்கும்படி ஐ.நா வேண்டுகோள் விடுத்த நிலையில் பல நாடுகளும் காஸாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை அளிக்க ஆரம்பித்துள்ளன.

காஸாவை நோக்கி அயல்நாடுகளினால் வழங்கப்பட்ட நிவாரண உதவிகளை ஏந்திய டிரக் வாகனங்கள் சென்றுள்ளன.

கடந்த 11 நாட்களாக காஸாவில் ஏற்பட்ட கடும் மோதலில் 250ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

Related Posts