எரியும் கப்பலின் சிதைவுகள் கடற்கரையில்-ஒருவருக்கு தொற்று?(Video)

by Mano
264 views

கொழும்பு துறைமுகம் அருகில் தீப்பற்றி எரிகிற எக்ஸ்பிரஸ் பேர்ல் வெளிநாட்டுக் கப்பலில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் பாதிக்கப்பட்ட இந்தியப் பிரஜை இருவர் நேற்று இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு இருந்தனர்.

இதையடுத்து அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர்.

இதில் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு துறைமுகம் அருகில் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பர்ல் வெளிநாட்டுக் கப்பலில் இருந்து வெளியாகிய எண்ணெய் மற்றும் சில பொருட்கள் நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்கரைகளில் ஒதுங்கியிருக்கின்றன.

இதற்கமைய நீர்கொழும்பு, ஜா-எல, கப்புகொட, சேத்துபாடுவ ஆகிய கடற்கரைகளில் இவ்வாறு பொருட்களையும் எண்ணெய் சேர்ந்த நீரையும் காணமுடிகின்றதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய கடலோரப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு இதுகுறித்த எச்சரிக்கை ஒன்றையும் நேற்று அரசாங்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

Related Posts