டில்லியில் கொரோனா குறைந்தது-நாளை மறுநாள் ஊரடங்கும் தளர்வு!

by Mano
136 views

முழு இந்தியாவையும் உலுக்கிய கொரோனா வைரஸின் உக்கிரத் தாக்கம் டில்லியில் ஏற்பட்ட நிலையில், தற்போது அங்கு தொற்றினால் நாளாந்தம் பாதிக்கப்படுகின்ற  நோயாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் டில்லியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டமும் நாளை மறுதினம் திங்கட்கிழமை நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

டெல்லி மாநிலத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள், திங்கள் முதல் படிப்படியாக தளர்த்தப்படும் என மாநில  முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, வரும் 31ஆம் திகதி முதல் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாகச் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளை ஒரு வாரத்துக்கு இயக்க அனுமதிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த மாதம் 20ஆம் திகதி கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த அதேவேளை, 29 ஆயிரம் பேர் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, தீவிரமான, தளர்வுகள் அற்ற ஊரடங்கை முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார். 

ஏறக்குறைய ஒரு மாதத்துக்கும் மேல் ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில், அங்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றவர்களின் நாளாந்த எண்ணிக்கை தற்போது ஆயிரமாகக் குறைந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 25000 தொற்றாளர்கள் வரை பதிவாகியிருந்த போதிலும் தற்சமயம், தினமும் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை 1500ஆக குறைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்தே டில்லியில் ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்தும் பணியை மாநில அரசு தொடங்கியுள்ளது.

Please follow and like us:

Related Posts