சிறார்களுக்கு பைசர்-ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி!

by Mano
135 views

கொரோனா தொற்றுக்கு எதிரபன பைசர் தடுப்பூசியை 12 வயது முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு வழங்க ஐரோப்பா சங்கம் அனுமதியளித்துள்ளது.

தற்சமயம் இந்த தடுப்பூசியானது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருவதோடு, இந்தியாவின் திரிபடைந்த கொரோனா தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயற்படக்கூடிய தடுப்பூசியான பைசர் காணப்படுகின்றது.

இந்த நிலையில், கொரோனா தொற்றினை முற்றாக ஒழிப்பதற்கான மற்றுமொரு படியாக பைசர் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வழங்கப்படுகின்ற அனுமதியாக அதனைக் கருதுவதாக ஐரோப்பிய சங்கத்தின் சுகாதார ஆணையாளர் ஸ்டெலா கிரியாகைட்ஸ் (Stella Kyriakides) தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்தத் தடுப்பூசியை சிறுவர்களுக்கு அளிக்க முடியும் என்று கூறப்பட்டாலும், அதனை பயன்படுத்துவதா இல்லையா என்கிற தீர்மானமானது சிறுவர்களின் பெற்றோரையே சாரும் என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகிய ஜேர்மனில், 12 வயதுக்கும் அதிகமான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை எதிர்வரும் மாதத்திலிருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

Related Posts