பேர்ல் கப்பாலின் பிளாஸ்ரிக் எச்சங்கள் மன்னார் கடல்பகுதியிலும் மீட்பு

by Mano
10 views


கடந்த வாரம் இலங்கை கடற்பரப்பில் தீபற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் எம சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்காலை பொலிஸ் நிலைத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பிலேயே மேற்படி சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் கூறினார்கள்.

குறித்த சிறிய உருண்டைகள் கடல் கரையேரங்கள் முழுவதிலும் சிதறி கிடப்பதை அவதானிக்க கூடியதா உள்ளதுடன் குறித்த பகுதிக்கு பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை அதிகாரிகள் வருகை தந்து கரைஒதுங்கியுள்ள பிளாஸ்ரி பொருட்கள் தொடர்பாக பார்வை இட்டுவருகின்றனர்.

Please follow and like us:

Related Posts