அடுத்த பிரதமர் நாமலா? பஸிலா?

by Mano
4 views

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இலங்கையின் அடுத்த பிரதமராக நியமிக்கப்பட்டால் அதற்கு இருகரங்களையும் உயர்த்தி ஆதரவளிப்போம் என ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் தெரிவிக்கின்றனர்.

எனினும் அடுத்த தலைவராக நியமிக்கப்படுவதற்கான அத்தனை தகுதிகளும் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு இருப்பதாக பொதுஜன முன்னணியினர் குறிப்பிடுகின்றனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 2022ஆம் ஆண்டில் தனது பதவியை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கிவிட்டு ஓய்வை அறிவிக்கப் போவதாக தென்னிலங்கையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனிடையே அடுத்த பிரதமர் பதவி மற்றும் ஜனாதிபதி பதவிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச செய்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இராஜாங்க கல்வி அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தருமான பியல் நிஷாந்த, நாமல் ராஜபக்சவுக்கு பிரதமராவதற்கும், பஸில் ராஜபக்சவுக்கு நாட்டின் தலைவராவதற்குமான தகுதிகள் இருப்பதாகக் கூறினார்.

நாமல் ராஜபக்ஷ பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர். வளர்ச்சியடைந்து வரும் பலம்வாய்ந்த நபர் அவர். எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய விடயங்கள் பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிகுந்த பலம் உள்ளவரும், மக்களை சரியாக உணர்ந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இருக்கின்றார். எதிர்காலத்தில் பலரும் இருக்கின்றார்கள். அவர்களிடையே நாமல் ராஜபக்ஷவும் தகுதிகளைப் பூர்த்தி செய்து வருகின்றார். இன்று நாங்கள் நாடாளுமன்றத்தில் இருப்பது, நாட்டின் வெற்றியைப் பதிவு செய்தது பஷில் ராஜபக்ஷவினாலாகும். குறுகிய காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை அமைத்தமை, ஜனாதிபதியை நியமித்தமை, முதிர்ச்சியடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பதவிக்கு அமர்த்தியமை, எம்மைப்போல புதியவர்களுக்கு முன்நோக்கி வர தலைமைத்துவம் வகித்தவரே பஷில்  ராஜபக்ஷ. அவர் நாளை இந்த நாட்டின் தலைவராக வருவாராயின் இரண்டு கைகளையும் உயர்த்த நாங்கள் தயார். இருப்பினும் எமக்கு தற்போது பலம்வாய்ந்த ஒரு தலைவர் இருக்கின்றார்” என்று தெரிவித்தார்.

Please follow and like us:

Related Posts