மொட்டுக்கட்சி உறுப்பிர்கள் இடையே வெள்ளவத்தையில் மோதல்!

by Mano
4 views

கொழும்பு – வெள்ளவத்தை – விஹாரை வீதியில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நகர சபை பெண் உறுப்பினருக்கும், அதே கட்சியைச் சேர்ந்த மற்றுமொரு உறுப்பினருக்கும் இடையே இன்று பகல் மோதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் உறுப்பினர் அமைச்சர் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்தவர் என்று வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மோதல் ஏற்பட என்ன காரணம் என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இதுகுறித்த மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Please follow and like us:

Related Posts