கொரோனா கட்டுப்பாடுகள் இங்கிலாந்தில் நீடிக்கும் சாத்தியம்!

by Mano
193 views

இங்கிலாந்தில் நடைமுறையிலுள்ள கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை முற்றாக நீக்கும் தீர்மானத்தை தாமதப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

கொரோனா தொற்றின் திரிபடைந்த டெல்டா தொற்றின் அச்சம் எழுந்துள்ள நிலையிலேயே பிரித்தானிய அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதியளவில் தற்போதைய நடைமுறையிலுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை நீக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும் எதிர்வரும்  திங்கட்கிழமை இறுதி முடிவு வெளிவரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்த தீர்மானத்தை எதிர்வரும் 4 வாரங்களுக்கு தள்ளிவைப்பதற்கான தீர்மானமே பெரும்பாலும் எட்டப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Please follow and like us:

Related Posts