ஜேர்மன் வெள்ளத்தில் 120 பேர் பலி!

by Mano
132 views

ஐரோப்பாவில் மேற்கு ஜேர்மனி மற்றும் ஏனைய பிராந்தியங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஐ தாண்டியுள்ளது.

இந்த நிலையில் வெள்ள அனர்த்தங்களில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது

ஜேர்மனியில் பெய்த வரலாறு காணாத மழைவீழ்ச்சியை அடுத்து ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம் காரணமாக 90 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிக்ள உறுதி செய்துள்ளனர்.

றீனலாண்ட் பெலட்ரினாற்ற மாநிலத்தில் 60 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்து 300 பேர் வரை காணாமல் போயுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிடடுள்ளனர்.

எனினும் நம்பிக்கையை கைவிடலாம் தேடுதல் பணிகள் இடம்பெறுவதாகவும் புதிய வெள்ளப் பாதுகாப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் றீனலாண்ட் பெலட்ரினாற்ற தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

700 மக்கள் வசித்துவந்த சுல்ட் என்ற கிராமம் முற்றுமுழுதாக அழிவடைந்துள்ளதுடன், வடக்கு றீன வெஸ்ட்ஃபாலியா மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநிலத்தில் 40 ற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதுடன், பெல்ஜியத்துடனான எல்லையில் உள்ள பாரிய நீர்த்தேக்கம் வான்பாய்ந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

ஜேர்மனியில் மனிதப் பேரழிவு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது ஏற்பட்டுள்ள பேரழிவானது மிகவும் கொடூரமானது எனவும் ஜேர்மன் உள்விவகார அமைச்சின் மாநில செயலாளர் கூறியுள்ளார்.

காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் அவசர சேவைப் பணியாளர்கள் என சுமார் 15 ஆயிரம் பேர் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வெள்ள அனர்த்தங்களில் இருந்து தப்பிக்கும் வகையில் வீடுகளின் கூரைகளில் தஞசமடைந்தவர்கள், ஹொலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டுவருவகின்றனர்.

அத்துடன் வீதிகளில் முறிந்துவீழ்ந்துள்ள மரங்கள் மற்றும் சிதைவுகளை அகற்றும் பணிகளிலும் மீட்பு பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

ஜேர்மனியின் அயல்நாடான பெல்ஜியத்திலும் வெள்ள அனர்த்தங்களில் சிக்கி 20 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கான மின்சார வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாக பெல்ஜியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நெதர்லாந்தும் வெள்ள அனர்த்தங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  நாட்டின் தென் பிராந்தியத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

லிம்பேர்க் மாகாணத்தில் மியூஸ் நதி யோரங்களில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மார்க் ரூட்டி அனர்த்தம் தொடர்பான அமைச்சரவை சந்திப்பையும் மேற்கொண்டுள்ளார்.

Please follow and like us:

Related Posts