சீன தடுப்பூசிகள் ஆபத்தா?

by Mano
115 views

கொரோனாவுக்கு எதிரான சீனாவின் தடுப்பூசிகளை எதிர்காலத்தில் தாம் பயன்படுத்தப்போவதில்லை என சில ஆசிய நாடுகள் தெரிவித்துள்ளன.

சீனாவின் கொவிட் 19 க்கு எதிரான தடுப்பூசிகளான சினோபாம் மற்றும் சினோவக் ஆகியவற்றை பயன்படுத்தி வந்த ஆசிய நாடுகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸிக்கு எதிராக குறித்த சீன தடுப்பூசிகள் சிறந்த முறையில் நோயெதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஆசிய பிராந்தியத்தில் ஏற்கனவே கருத்துக்கள் நிலவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போது சீனாவின் தடுப்பூசியின் வினைத்திறன் தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலும் தடுப்பூசிகள் தொடர்பாக ஆசிய பிராந்தியத்தில் சீனா மேற்கொண்டுவரும் இராஜதந்திர முயற்சிகளின் பிரதிபலிப்பாக கூட இது இருக்கலாம் என கருதப்படுகின்றது.

ஏற்கனவே சீனாவின் தயாரிப்பான சினோவக் தடுப்பூசிகளை பயன்படுத்திய தாய்லாந்து அஸட்ராஸெனிக்காவிற்கு மாறுவதாக அறிவித்திருந்தது.

இதேபோன்று இந்தோனேசியாவும் மொடேர்னா தடுப்பூசியுடன் இணைத்தே சீனாவின் தயாரிப்பான தடுப்பூசிகளை பயன்படுத்தவுள்ளது.

சீனாவின் இரண்டு வகையான தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்ட நூற்றுக்கணக்கானவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தாய்லாந்தும்
இந்தோனேசியாவும் குறிப்பிட்டுள்ளன.

இரண்டு வகையான தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என தாய்லாந்தின் மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பிலிப்பைன்ஸ், இல ங்கை மற்றும் கம்போடியா போன்ற நாடுகள் தொடர்ந்தும் சீனாவின் தடுப்பூசிகளையே பயன்படுத்துகின்றன.

30 க்கும் அதிகமான ஆசிய நாடுகள் சீனாவின் தடுப்பூசிகளை பயன்படுத்திவருவதுடன் உலகில் சீனாவிடமிருந்து
அதிகளவான தடுப்பூசிகளை கொள்வனவு செய்த நாடாக இந்தோனேசியா காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

Related Posts