ஒரே நேரத்தில் இரண்டு தடுப்பூசி பெற்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

by Mano
125 views

கண்டி − பேராதனை பகுதியில் பெண்ணொருவருக்கு ஒரே நாளில் இரு தடவைகள் மொடர்னா கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து, குறித்த பெண் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் இந்த பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடபேராதனை கொவிட் தடுப்பூசி நிலையத்தில், இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

பேராதனை ஒகஸ்டாவத்தை பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாய் ஒருவருக்கே, ஒரே நாளில் இரு தடவைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர், பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Please follow and like us:

Related Posts