ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சியா? விக்கேஸ்வரன் சந்தேகம்

by Mano
122 views

ஏற்கனவே தமிழ் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை முயற்சிக்கான கூட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது ஏன் அவசரமாக மீண்டும் ஒரு கூட்டு முயற்சிக்கான கூட்டங்கள் இடம்பெறுவதாக சி வி கே சிவஞானம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 நேற்றையதினம் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சிவி விக்னேஸ்வரன் அண்மையில் நடந்த ஒற்றுமைக்கான அனைத்து கட்சிகளின் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் சிவி கே சிவஞானம்  கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டதாகவும் தான் இதோ வருகிறேன் வாகனத்தில் ஏறி விட்டேன் என கூறியதாகவும் தெரிவித்து இருந்தார்.

எனினும் தன்னை அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கட்சியின் தலைவரோ அல்லது கட்சியோ தன்னை பணிக்க வில்லை அதன் காரணமாகவே தான் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்து இருந்ததோடு மேலும் கடந்த வருட இறுதிப் பகுதியிலிருந்து ஒற்றுமைக்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்ற நிலையில் அந்தக் கூட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் கட்சிகள் இணைந்து கூட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் புதிதாக ஏன் இந்த   கூட்டு முயற்சி இடம்பெறுகின்றது என நான் கேட்க விரும்புகின்றேன் என தெரிவித்திருந்தார்

Please follow and like us:

Related Posts